News March 30, 2024
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை பெருவிழா

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் நிகழாண்டுக்கான திருவிழா ஏப்.12 முதல் 23 வரை நடைபெறுகிறது. ஏப்.12 கொடியேற்றத்துக்குப் பின், ஒவ்வொரு நாள் மாலையும் சுவாமி அம்பாளுடன் சிம்மம்கமலம்,அன்னம்,யாழி, காமதேனு, பொன்மான் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்.21, அடுத்த நாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏப்.23 தீா்த்தவாரியுடன் நிறைவடைகிறது.
Similar News
News January 18, 2026
திண்டுக்கல்: இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்புவது எப்படி?

திண்டுக்கல் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!
News January 18, 2026
கொடைக்கானலுக்கு மீண்டும் எச்சரிக்கை!

இன்று கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று மீண்டும் உறைபனி நிலவியது. கொடைக்கானல் மலைப்பகுதியில் புல்வெளிகள் மற்றும் செடி, கொடிகள் மீது பனித்துளிகள் படர்ந்து கிடந்தன. மேலும் அதிகாலை நேரத்தில் நட்சத்திர ஏரியில் 6 டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்பநிலை நிலவியது.
News January 18, 2026
உஷார் மக்களே: திண்டுக்கல்லில் இங்கெல்லாம் மின்தடை!

திண்டுக்கல் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக செம்பட்டி, பழைய செம்பட்டி, கோடாங்கிபட்டி, முண்டாம்பட்டி.
ஆத்தூர், சித்தையன்கோட்டை, காமலாபுரம், ராமராஜபுரம். பாளையங்கோட்டை, வீரக்கல், கசவனம்பட்டி, அம்பாத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்கள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.


