News March 30, 2024
LSG Vs PBKS: வெல்லப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் & பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் LSG 2 முறையும், PBKS 1 முறையும் வென்றுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் RCB, KKR அணிகளுக்கு இடையேயான 11ஆவது லீக் போட்டி லக்னோ ஸ்டேடியத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே குறிப்பிடவும்.
Similar News
News November 8, 2025
4,000 ஆண்டுகளாக எரியும் தீ; அணையாத மர்மம்

புயல், மழை, பனி, சூறைக்காற்று என எதற்கும் அணையாத தீயை பார்த்ததுண்டா?அசர்பைஜானில் 4000 ஆண்டுகளாக ’யனார் தாக்’ என்ற மலை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. நிலத்தடியில் இருக்கும் இயற்கை எரிவாயு கசிவதால் இந்த அதிசயம் நிகழ்கிறது என்கின்றனர். ஒரு காலத்தில் இதுபோன்ற மலைகள் அந்நாட்டில் அதிகமான இருந்தன. காலப்போக்கில் எரிவாயு எடுக்கும் பணிகள் தொடங்கியதால் தற்போது இந்த ஒரு மலைதான் தப்பியுள்ளது.
News November 8, 2025
உதயநிதிக்கு புதிய பட்டம் கொடுத்த CM ஸ்டாலின்!

அறிவு திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என உதயநிதியிடம் CM ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். திமுகவின் 75வது அறிவுத்திருவிழாவை தொடங்கி வைத்து பேசிய அவர், உதயநிதியை ‘கொள்கை இளவல்’ என குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறார். மேலும், திமுகவின் வெற்றி ஒரு வரலாற்று சாதனை என்பது பலருக்கு தெரியவில்லை எனவும், திமுக போல் வெல்லவேண்டும் என்றால் இக்கட்சியை போல அர்ப்பணிப்பு வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
News November 8, 2025
‘Sorry அம்மா, அப்பா.. நான் செத்துப் போறேன்’

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் உ.பி.யைச் சேர்ந்த முகமது ஆன் (21) என்ற மாணவர், ராவத்பூரில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘அம்மா, அப்பா தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். இதற்கு நான் முழு பொறுப்பு’ என்று எழுதப்பட்ட தற்கொலை கடிதத்தை போலீசார் மீட்டுள்ளனர்.


