News February 25, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னை – பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு அணி 34 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில், சென்னை அணி 24 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
Similar News
News February 25, 2025
IND அணிக்கு கூடுதல் சாதகம்: கம்மின்ஸ்

சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாயில் ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக அமைந்துள்ளதாக AUS வீரர் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இது ஏற்கனவே பலம் வாய்ந்த அணியாக உள்ள இந்திய அணிக்கு உதவும் எனவும், ஒரே மைதானத்தில் மொத்த தொடரையும் விளையாடுவது, அந்த மைதானத்தை வீரர்கள் முழுமையாக புரிந்து கொள்ள உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். காயம் காரணமாக AUS அணியில் கம்மின்ஸ் இடம்பெறவில்லை.
News February 25, 2025
ரூபாய் மதிப்பு கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு முதலீடு, பிரென்ட் கச்சா விலை அதிகரிப்பு ஆகியவை இன்று எதிராெலித்தது. இதனால் இன்று (பிப்.25) காலை வர்த்தக நேரத் தொடக்கத்தில் ரூ.86.72ஆக இந்திய ரூபாய் மதிப்பு இருந்தது. பின்னர் சட்டென 16 காசுகள் சரிந்து ரூ.86.88ஆக வர்த்தகமானது.
News February 25, 2025
ஜீவாவுக்கு ராஷி கன்னா செய்த சத்தியம்

பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக ராஷி கன்னா பிராமிஸ் செய்துள்ளதாக ஜீவா தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து நடித்த ‘அகத்தியா’ பட புரொமோஷன் விழாவில் பேசிய அவர், இருவரும் தொடர்ந்து 2 ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இப்படத்தின் கிளைமாக்ஸை பார்த்து பிரமிப்படைந்ததாகவும், இப்படத்திற்காக இயக்குநர் பா.விஜய் அதிகமாக மெனக்கெட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.