News February 25, 2025
340 டாட் பால்… வங்கதேசம் மோசமான சாதனை

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 50 ஓவர்களுக்கு மேல் டாட் பால் விளையாடிய அணி என்ற மோசமான சாதனையை வங்கதேசம் படைத்துள்ளது. இந்த தொடரில் இதுவரை 340 பந்துகளில் (56.4 ஓவர்கள்) BAN வீரர்கள் ரன் எடுக்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிராக 181 பந்துகளையும், இந்தியாவுக்கு எதிராக 159 பந்துகளையும் ரன் எடுக்காமல் விட்டுள்ளனர்.
Similar News
News February 25, 2025
குட்டிகளை பெற்றெடுக்கும் ஒரே ஆண் உயிரினம்

Syngnathidae குடும்பத்தைச் சேர்ந்த மீன் வகைகளில், ஆண் இனங்கள் குட்டிகளை பெற்றெடுக்கின்றன. இவை கடல் குதிரைகள், குழாய் மீன் அல்லது கடல் டிராகன்கள் என அழைக்கப்படுகின்றன. முதலில் பெண் மீன்கள் ஆணின் வயிற்றுக்குள் உள்ள சிறப்பு பைகளில் முட்டைகளை மாற்றுகின்றன. முட்டைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, 2-4 வாரங்களுக்குப் பிறகு, ஒரே நேரத்தில் அவை 50 – 1000 குஞ்சுகளை பெற்றெடுக்கின்றன.
News February 25, 2025
ஆதிக்க மொழியை அனுமதிக்க முடியாது: ஸ்டாலின்

இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று TN CM ஸ்டாலின் மீண்டும் உறுதிபட கூறியுள்ளார். தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார். தமிழை காக்கும் அறப்போரில் தானும் ஒருவனாக என்றும் துணை நிற்கப் போவதாகவும் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு 3வது மொழி தேவையா? தேவையற்றதா? உங்கள் கருத்தை கமெண்ட் செய்யுங்கள்.
News February 25, 2025
ஏறுமுகத்தில் மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 267 புள்ளிகள் உயர்ந்து 74,722 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் 51 புள்ளிகள் அதிகரித்து 22,604 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பஜாஜ் ஃபின்சர்வ், அதானி போர்ட்ஸ், ஆட்டோ மற்றும் வங்கித் துறைகளின் பங்குகள் லாபம் ஈட்டியுள்ளன. எனினும் நேற்றைய வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் கலக்கத்திலேயே உள்ளனர்.