News February 25, 2025
13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 13 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஆயுஷ் மணி திவாரி சென்னை குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாகவும், ஜெயராம் சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர். சைபர் க்ரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News February 25, 2025
BREAKING: தங்கம் விலை மேலும் உயர்வு

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.160 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.8,055க்கும், ஒரு சவரன் ரூ.64,440க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், தங்கம் இன்று 1 கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.8,075க்கும், ஒரு சவரன் ரூ.160 அதிகரித்து ரூ.64,600க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. 1 கிராம் வெள்ளி ரூ.108க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1.08 லட்சத்துக்கும் விற்கப்படுகிறது.
News February 25, 2025
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு..

*படிக்கும் போது, முக்கியமான பாயிண்ட்ஸை அடிக்கோடிட்டு, வையுங்கள். இல்லை, வேறோரு கலர் கொடுத்து முக்கியமான பாயிண்ட்ஸை மார்க் செய்யவும் *முதல் முறை படிக்கும் போதே, பதிலுக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு படித்து விடுங்கள் * அனைத்து பாடங்களையும் தொடர்ச்சியாக படித்து கொண்டே இருக்க வேண்டாம். அது மூளையை டயர்ட் ஆக்கும் *தயவு செய்து மனப்பாடம் செய்யாதீர்கள். தைரியமாக எழுதுங்கள். வெற்றி நிச்சயம்!
News February 25, 2025
உக்ரைன் அடிபணிய தேவையில்லை: பிரான்ஸ்

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து US அதிபர் டிரம்புடன் ஆலோசித்ததாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார். டிரம்புடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைதிக்காக உக்ரைன் அடிபணிய வேண்டிய அவசியம் ஏற்படாது. உக்ரைனின் இறையாண்மையை காக்கும் வகையில் அந்த அமைதி இருக்கும் என்றார். அடுத்த வாரம் உக்ரைனுடன் அரிய இயற்கை வளங்கள் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக டிரம்ப் கூறினார்.