News February 25, 2025
இன்றைய (பிப். 25) நல்ல நேரம்

▶பிப்ரவரி- 25 ▶மாசி – 13 ▶கிழமை: செவ்வாய்
▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 03:00 PM- 04:30 PM
▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM
▶குளிகை: 12:00 PM- 01:30 PM
▶திதி: திரயோதசி ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: திருவாதிரை
▶நட்சத்திரம் : உத்திராடம் மா 5.11
Similar News
News February 25, 2025
ஹிந்தி கற்றால் என்ன? கிருஷ்ணசாமி

ஏழைக் குழந்தைகள் ஹிந்தியை கற்றால் திமுகவிற்கு என்ன கஷ்டம் வரப்போகிறது என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மும்மொழியை ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம் எனவும், ஹிந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், முன்பு மொழியை வைத்து அரசியல் செய்தது திமுகவிற்கு கைகொடுத்திருக்கலாம், ஆனால் இது AI காலம் எனவும் விமர்சித்துள்ளார்.
News February 25, 2025
விலைகளை உயர்த்தப் போகும் நெஸ்லே

நெஸ்லே நிறுவனம் தனது தயாரிப்புகள் சிலவற்றின் விலையை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. காபி, கோகோ, எண்ணெய் விலைகளின் உயர்வு காரணமாக இந்த முடிவை எடுத்து உள்ளதாகவும், அதிகரித்துவரும் விலைவாசி, பணவீக்கம் காரணமாக நுகர்வு குறைந்துள்ளதால் கடைசி காலாண்டு லாபமும் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நெஸ்லே தயாரிப்புகளில் மேகி, செர்லாக், கிட்காட், மைலோ, நெஸ்கபே முக்கியமானவை.
News February 25, 2025
பிரியங்காவின் அழகு ரகசியம்.. டெய்லி இதை செஞ்சிருவாராம்!

கிளாமர் நாயகிகளுக்கு மத்தியில் தனது ஹோம்லி லுக்கால் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயினாக இருக்கிறார் பிரியங்கா மோகன். ‘எப்படி தாங்க இவுங்க இவ்வளோ அழகா இருக்காங்க’ என கேட்பவர்களுக்கு, ‘இது தான் என் டெய்லி ரொட்டின்’ என போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் டெய்லி தவறாமல் தியானம் செஞ்சிருவேன் என குறிப்பிட்டுள்ளார். அப்புறம் என்ன வெயிட்டிங், நீங்களும் இன்னைக்கே ஸ்டார்ட் பண்ணுங்க!