News February 25, 2025
தினமும் மோடியின் டிபன் என்ன தெரியுமா?

ஆண்டுக்கு 300 நாள்கள் டிபனுக்கு மக்கானாவைதான் சாப்பிடுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்கானா என்பது அல்லி மலரின் விதைகள் ஆகும். வட இந்திய மக்கள் இதனை அதிகளவில் சாப்பிடுகின்றனர். ஊட்டச்சத்து மிக்க இந்த உணவின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பட்ஜெட்டில் மக்கானா வாரியம் அமைப்பது குறித்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தினமும் காலையில் அதைதான் உட்கொள்வதாக மோடியே தற்போது பேசியிருக்கிறார்.
Similar News
News February 25, 2025
CM தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

CM ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட நிலையில், கூடுதல் அம்சங்கள் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாதவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News February 25, 2025
காலை 1 கிளாஸ் கற்றாழை ஜூஸ்; இவ்வளவு நன்மைகளா..?

*காற்றாழையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும் *சிறிதளவு எலுமிச்சை சாறை கற்றாழை ஜூஸில் கலந்து குடித்தால், எடை இழப்புக்கு பெரிதும் உதவுமாம் *கற்றாழை சாறுடன் நெல்லிக்காயும் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் முடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் மாறும் *வாய் புண்கள் விரட்ட, கற்றாழை ஜூஸில் இருக்கும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உதவும்.
News February 25, 2025
BREAKING: வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம்

கொல்கத்தா அருகே வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்திற்கும் இந்தியாவின் கொல்கத்தா, புவனேஸ்வர் இடையே வங்கக்கடல் நடுவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.