News February 25, 2025
PF பயனாளர்களுக்கு அதிக வட்டி?

PF சந்தாதாரர்களுக்கு இந்த வாரம் இனிப்பான செய்தி ஒன்று வெளியாகவிருக்கிறது. நடப்பு நிதியாண்டுக்கான PF வட்டி எவ்வளவு வழங்கலாம் என்று மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபடவுள்ளது. கடந்த ஆண்டு அதிக வட்டியான 8.25% வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டும் அதே அளவு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில், முதலீடு செய்யப்பட்ட PF தொகை அதிக லாபம் கொடுத்திருப்பதால் அதிக வட்டிக்கு வாய்ப்புண்டு.
Similar News
News February 25, 2025
BREAKING: வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம்

கொல்கத்தா அருகே வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்திற்கும் இந்தியாவின் கொல்கத்தா, புவனேஸ்வர் இடையே வங்கக்கடல் நடுவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
News February 25, 2025
2 நாட்களுக்கு கனமழை: IMD

நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுநாள் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. 28ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியிலும், 1ஆம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரத்திலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் IMD கூறியுள்ளது.
News February 25, 2025
போப் உடல்நிலையில் லேசான முன்னேற்றம்: வாடிகன்

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. எனினும் செயற்கை சுவாசத்தில் தான் போப் இருக்கிறார் என்றும், அதே நேரம் அவருக்கான ஆக்சிஜன் தேவை சற்று குறைந்திருப்பதாகவும் வாடிகன் கூறியுள்ளது. நுரையீரலில் நிமோனியா தாக்கியதால் சுவாசப் பிரச்னை ஏற்பட்டு கடந்த 14 ஆம் தேதி ஹாஸ்பிடலில் போப் அனுமதிக்கப்பட்டார்.