News February 25, 2025
மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு

ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெடகாகனி என்ற இடத்தில் பள்ளம் தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கியதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது எப்படி நடந்தது என்பது பற்றி விரிவான தகவல் இல்லை. உயிரிழந்த நால்வரில் ஒருவர் விவசாயி, மற்ற மூவர் கூலிகள் என்று சொல்லப்படுகிறது.
Similar News
News February 25, 2025
அரசு ஊழியர்கள் இன்று மறியல் போராட்டம்

தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முடிவு எடுத்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், 11 லட்சம் ஊழியர்கள் விடுப்பு எடுத்து, மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் அரசு பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
News February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: AUS Vs SA இன்று மோதல்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிராகவும், தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் முதல் ஆட்டத்தில் வென்றுள்ளன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
News February 25, 2025
இந்தியை திணிக்க பாஜக முயலவில்லை: டிடிவி தினகரன்

பொய்யான வாக்குறுதிகளை கூறி அதனை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் பழி போட்டு வருவதாக டி.டி.வி. தினகரன் குறை கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு என்று கூறுவது தவறான வாதம் என்றார். தி.மு.க.வுக்கு எதிராக தமிழக மக்கள் உள்ளதாகவும், அவர்களை மடைமாற்றவே மீண்டும் மொழிப்போர் என திமுக பொய் பிரசாரம் செய்வதாகவும் அவர் சாடியுள்ளார்.