News February 25, 2025
பாலியல் வழக்கு: தேடப்பட்டு வந்தவர் மீது துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடியில் கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் கத்தியை காட்டி வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இதனிடையே, தலைமறைவான மாரிச்செல்வம் என்பவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காலில் குண்டு துளைத்த நிலையில், அவர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News February 25, 2025
திமுகவினர் ED அலுவலகம் செல்லலாம்: அண்ணாமலை

இந்தி எழுத்துக்களை அழிக்கும் திமுகவினர் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி அலுவலகத்துக்கும் செல்லுமாறு அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். இரண்டு அலுவலகங்களின் முகவரிகள் தெரியவில்லை என்றால், இங்கு அடிக்கடி செல்லும் திமுக அமைச்சர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறும் கூறியுள்ளார். கருப்பு பெயிண்ட் டப்பாவை வைத்து இனி அரசியல் செய்ய முடியாது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
News February 25, 2025
அரசு ஊழியர்கள் இன்று மறியல் போராட்டம்

தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முடிவு எடுத்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், 11 லட்சம் ஊழியர்கள் விடுப்பு எடுத்து, மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் அரசு பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
News February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: AUS Vs SA இன்று மோதல்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிராகவும், தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் முதல் ஆட்டத்தில் வென்றுள்ளன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.