News February 25, 2025
நல்ல மதிப்பெண் பெற்ற 400 பேருக்கு அரசு வேலை மறுப்பு!

அரசு மருத்துவர் பணிக்கு தேர்வெழுதி, நல்ல மதிப்பெண் பெற்ற 400 மருத்துவர்கள் தகுதியில்லாதவர்கள் எனக் கூறி நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் பணிக்கு 2024க்கு முன்பு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். இதனால், தாமதமாக மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ததாக, தேர்வில் வெற்றி பெற்ற 400 மருத்துவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News February 25, 2025
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஞானேஷ் குமார்

சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். கும்பமேளாவில் நீராடியது உணர்வுப்பூர்வமாகவும், மனநிறைவை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். திரிவேணி சங்கமத்தில் இதுவரை 60 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக உ.பி அரசு தெரிவித்துள்ளது.
News February 25, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னை – பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு அணி 34 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில், சென்னை அணி 24 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
News February 25, 2025
ஒருங்கிணைந்த அதிமுகவே இலக்கு: சசிகலா

வரும் தேர்தலில் வென்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என சசிகலா கூறியுள்ளார். உசிலம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவே போட்டியிடும் என்றார். மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கியே தங்கள் பயணம் இருப்பதாகவும், அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.