News February 25, 2025
தீக்கிரையான திருவாரூர் ஆழித்தேர் வரலாறு

தியாகராஜ சுவாமி கோயிலுக்குரிய தேரான ஆழித்தேர் 1927இல் முற்றிலுமாகத் தீக்கிரையானது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட பெருமுயற்சியின் காரணமாக 1930இல் புதிய தேர் உருவாக்கம் பெற்று தேர்த் திருவிழா நடைபெற ஆரம்பித்தது. 1930இல் வடிவமைக்கப்பட்ட தேரில் 400க்கும் மேற்பட்ட மரச்சிற்பங்கள் உள்ளன. 1943ஆம் ஆண்டில் தேரோட்டச் செலவு ரூ.7,200 ஆயிற்று. திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது.
Similar News
News July 8, 2025
திருவாரூர் ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 7, 2025
திருவாரூரில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை

தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
News July 7, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 54 நகர்ப்புற முகாம்கள் 131 ஊரக முகாம்கள் என மொத்தம் 185 முகாம்கள் நடைபெற உள்ளன. ஜூலை 15 திருவாரூர், மன்னார்குடி, கொரடாச்சேரி வட்டத்திலும்; ஜூலை 17ஆம் தேதி நன்னிலம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், கூத்தாநல்லூர், பேரளம் பகுதியில் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.