News March 30, 2024

வள்ளலாரின் பொன்மொழிகள்

image

✍அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை; உண்மையைச் சொல் அது மரியாதையை காக்கும்.✍எல்லா உயிர்களிடத்திலும் இறை வியாபித்திருக்கிறார் என்று அறிதலே மெய்யியலின் மெய். ✍பாவம், புண்ணியம் என்பன மனம், சொல், செயல் ஆகிய முவ்வழிகளில்தான் நம்மை வந்தடைகின்றன.✍உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள்.✍சோதனைகளே ஒருவருக்கு அவரை அவருக்கே யாரென அறிமுகப்படுத்துகிறது.

Similar News

News March 15, 2026

தேர்தலில் முதல்முறையாக வரப்போகும் அதிரடி மாற்றம்

image

5 மாநில தேர்தல் தொடர்பாக CEC ஞானேஷ் குமார் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, முதல்முறையாக வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் படம் மற்றும் சின்னம் கருப்பு வெள்ளையாக இல்லாமல் வண்ணத்தில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படும் எனவும் அனைத்து BLO-க்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 15, 2026

புதுச்சேரியில் ஏப்.9-ல் சட்டப்பேரவை தேர்தல்

image

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என CEC ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். ஒரே கட்டமாக 30 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

News March 15, 2026

BIG BREAKING: தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு

image

தமிழகத்திற்கு எப்போது சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற மக்களின் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. வழக்கம்போல், ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறும் என CEC ஞானேஷ் குமார் சற்றுமுன் அறிவித்துள்ளார். அதேபோல், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாக்காளர்களே, தயாராக இருங்க!

error: Content is protected !!