News February 24, 2025
நியூசி., அபார வெற்றி.. வெளியேறிய பாக்.,

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசி., அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 236 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசி., 46.1 ஓவரில் 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் குவித்தார். இதன் மூலம் நியூசி., இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றதால், பாக்., வங்கதேசம் தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறியது.
Similar News
News February 25, 2025
340 டாட் பால்… வங்கதேசம் மோசமான சாதனை

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 50 ஓவர்களுக்கு மேல் டாட் பால் விளையாடிய அணி என்ற மோசமான சாதனையை வங்கதேசம் படைத்துள்ளது. இந்த தொடரில் இதுவரை 340 பந்துகளில் (56.4 ஓவர்கள்) BAN வீரர்கள் ரன் எடுக்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிராக 181 பந்துகளையும், இந்தியாவுக்கு எதிராக 159 பந்துகளையும் ரன் எடுக்காமல் விட்டுள்ளனர்.
News February 25, 2025
நேரில் ஆஜராக சீமானுக்கு போலீஸ் சம்மன்

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வாரத்துக்குள் வழக்கை முடித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
News February 25, 2025
காதுக்குள் பூச்சி புகுந்தால் செய்ய வேண்டியவை…

▶காதுக்குள் பூச்சி புகுந்தால் இருட்டறைக்குள் சென்று மொபைல் லைட் அல்லது டார்ச் பயன்படுத்தி வெளிச்சம் காட்டினால், பூச்சிகள் ஒளியை கண்டவுடன் தாமாகவே வெளியே வந்துவிடும். ▶மிதமான சூட்டில் உள்ள நீரில் சிறிது உப்பு கலந்து காதுக்குள் சில துளிகள் விடலாம். உப்பு கலந்த நீர் பூச்சிகளுக்கு பிடிக்காததால், அவை விரைவில் வெளியேறிவிடும். ▶ இதில் பூச்சிகள் வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.