News February 24, 2025
BREAKING: அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

திட்டமிட்டபடி நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முடிவு எடுத்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்த ஐகோர்ட், எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. ஆனால், 11 லட்சம் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, மாவட்ட தலைநகரில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 25, 2025
நேரில் ஆஜராக சீமானுக்கு போலீஸ் சம்மன்

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வாரத்துக்குள் வழக்கை முடித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
News February 25, 2025
காதுக்குள் பூச்சி புகுந்தால் செய்ய வேண்டியவை…

▶காதுக்குள் பூச்சி புகுந்தால் இருட்டறைக்குள் சென்று மொபைல் லைட் அல்லது டார்ச் பயன்படுத்தி வெளிச்சம் காட்டினால், பூச்சிகள் ஒளியை கண்டவுடன் தாமாகவே வெளியே வந்துவிடும். ▶மிதமான சூட்டில் உள்ள நீரில் சிறிது உப்பு கலந்து காதுக்குள் சில துளிகள் விடலாம். உப்பு கலந்த நீர் பூச்சிகளுக்கு பிடிக்காததால், அவை விரைவில் வெளியேறிவிடும். ▶ இதில் பூச்சிகள் வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
News February 25, 2025
13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 13 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஆயுஷ் மணி திவாரி சென்னை குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாகவும், ஜெயராம் சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர். சைபர் க்ரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.