News February 24, 2025
கேரளாவை உலுக்கிய பயங்கரம்: 6 பேர் கொடூரமாக கொலை

இன்று கேரளாவில் நடந்துள்ள கொடூரச் சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. மதுவுக்கு அடிமையான இளைஞர் அஃபான், 6 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளான். இன்று மாலை 4 மணியளவில் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அம்மா, பாட்டியை வெட்டிக் கொலை செய்த அந்த கொடூரன், தனது தம்பி & அவரது காதலியை தீர்த்துக் கட்டியிருக்கிறான். அதன்பின் தம்பி காதலியின் பெற்றோரையும் விட்டுவைக்கவில்லை. அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News February 25, 2025
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஞானேஷ் குமார்

சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். கும்பமேளாவில் நீராடியது உணர்வுப்பூர்வமாகவும், மனநிறைவை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். திரிவேணி சங்கமத்தில் இதுவரை 60 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக உ.பி அரசு தெரிவித்துள்ளது.
News February 25, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னை – பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு அணி 34 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில், சென்னை அணி 24 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
News February 25, 2025
ஒருங்கிணைந்த அதிமுகவே இலக்கு: சசிகலா

வரும் தேர்தலில் வென்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என சசிகலா கூறியுள்ளார். உசிலம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவே போட்டியிடும் என்றார். மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கியே தங்கள் பயணம் இருப்பதாகவும், அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.