News February 24, 2025

4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4 அன்று தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் மகா சிவராத்திரிக்கும் (பிப்.26), மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழாவுக்கும் (மார்ச் 11) உள்ளூர் விடுமுறையாகும். குமரியில் இந்த 3 நாட்களுக்கு பதிலாக முறையே மார்ச் 8, 22 & ஏப்.12 ஆகிய தினங்கள் வேலைநாட்களாக இருக்கும்.

Similar News

News February 25, 2025

காதுக்குள் பூச்சி புகுந்தால் செய்ய வேண்டியவை…

image

▶காதுக்குள் பூச்சி புகுந்தால் இருட்டறைக்குள் சென்று மொபைல் லைட் அல்லது டார்ச் பயன்படுத்தி வெளிச்சம் காட்டினால், பூச்சிகள் ஒளியை கண்டவுடன் தாமாகவே வெளியே வந்துவிடும். ▶மிதமான சூட்டில் உள்ள நீரில் சிறிது உப்பு கலந்து காதுக்குள் சில துளிகள் விடலாம். உப்பு கலந்த நீர் பூச்சிகளுக்கு பிடிக்காததால், அவை விரைவில் வெளியேறிவிடும். ▶ இதில் பூச்சிகள் வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

News February 25, 2025

13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

image

ஐபிஎஸ் அதிகாரிகள் 13 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஆயுஷ் மணி திவாரி சென்னை குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாகவும், ஜெயராம் சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர். சைபர் க்ரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News February 25, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. ▶ஓய்வு, சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன். ▶ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். ▶ மதம் மனிதனை மிருகமாக்கும்; சாதி மனிதனை சாக்கடையாக்கும்.

error: Content is protected !!