News February 24, 2025
விருந்தினர்களை கடத்த சதி? பாகிஸ்தான் உளவு அமைப்பு

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை காண வரும் வெளிநாட்டு விருந்தினர்களை கடத்த தீவிரவாத இயக்கம் சதி செய்துள்ளதாக, பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மைதானங்கள், விடுதிகள், வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டு CT தொடரை பாகிஸ்தான் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு உளவுத்துறையின் எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 25, 2025
13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 13 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஆயுஷ் மணி திவாரி சென்னை குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாகவும், ஜெயராம் சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர். சைபர் க்ரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
News February 25, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. ▶ஓய்வு, சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன். ▶ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். ▶ மதம் மனிதனை மிருகமாக்கும்; சாதி மனிதனை சாக்கடையாக்கும்.
News February 25, 2025
அதிமுகவை அழிக்க இபிஎஸ் மட்டுமே போதும்: புகழேந்தி

அதிமுகவை இபிஎஸ் விரைவில் அழித்து விடுவார் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி விமர்சித்துள்ளார். ஓநாயும், வெள்ளாடும் கூட சேர்ந்துவிடும், ஆனால் ஒருபோதும் இபிஎஸ் திருந்த மாட்டார் எனவும் விமர்சித்துள்ளார். கொடநாடு கொலை வழக்கில் இபிஎஸ்யை விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.