News February 24, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடியில் சிக்கி சென்ற ஆண்டு மட்டும் 30 கோடி ரூபாய்க்கு மேல் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பணத்தை இழந்துள்ளனர். இணைய வழி மூலமாக வருகின்ற விளம்பரங்களை நம்பி எந்த ஒரு பங்கு வர்த்தகம் மற்றும் பணத்தை முதலீடு செய்யும் செயலில் இறங்கி பணத்தை இழக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.
Similar News
News February 24, 2025
புதுவை முதல்வருக்கு தவெக அழைப்பு

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் எனது நண்பர் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறிய நிலையில் அழைப்பு. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பாஜக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 24, 2025
புதுச்சேரியில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி

புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ம. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து வரும் மார்ச் மாதம் 03.03.2025 முதல் 08.03.2025 ஆம் தேதி வரை ”தேனீ வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பு மேலாண்மை” குறித்த ஆறு நாட்கள் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதில் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம். பயிற்சியில் சேர 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
News February 24, 2025
புதுவையில் கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் அணிவகுப்பு

புதுச்சேரி ரெயின்போ நகரில் கடந்த சில தினங்கள் முன்பு ரவுடி ரஷி உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரி முழுவதும் ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசாருடன், கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் நேற்று இரண்டாவது நாளாக அணிவகுப்பு சென்றனர்.