News February 24, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ்பச்சாவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.கூட்டத்தில் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 22, 2025
பெரம்பலூர்: “தீபாவளிக்கு கூடுதல் பேருந்து இயக்க முடிவு”

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான சா.சி.சிவசங்கரிடம் கேட்டபோது, “தீபாவளி பண்டிகைக்கு கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவில் பேருந்து வசதி இருக்கும். இதைப்பற்றி போக்குவரத்து துறை மேலாண்மை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தப்படும்.” என்று தெரிவித்தார்.
News September 22, 2025
பெரம்பலூர்: வங்கி வேலை-ரூ.80,000 சம்பளம்

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் வங்கிகளில் காலியாக உள்ள 13,217 Manager, Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், <
News September 22, 2025
பெரம்பலூர்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

பெரம்பலூர் மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!