News February 24, 2025
நகல் என்றுமே அசல் ஆக முடியாது: அண்ணாமலை

TNல் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில், 1000 முதல்வர் மருந்தகங்களை CM ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை TN அரசு காப்பியடித்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். அத்துடன், நகல் என்றுமே அசல் ஆக முடியாது என முதல்வர் மருந்தகம் குறித்து கிண்டலாக பதிவிட்டுள்ள அவர், தேர்வில் காப்பி அடிப்பது போன்ற மீம்ஸையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Similar News
News February 25, 2025
மனைவியை விவாகரத்து செய்த மாதம்பட்டி ரங்கராஜ்

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ருதி என்பவரை திருமணம் செய்த அவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், சினிமா ஆடை வடிவமைப்பாளராக உள்ள ஜாய் கிரிஸில்டா என்பவரை அவர் தற்போது காதலிப்பதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. மெகந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்த அவர், கேட்டரிங் தொழிலும் செய்து வருகிறார்.
News February 25, 2025
பாலியல் வழக்கு: தேடப்பட்டு வந்தவர் மீது துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடியில் கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் கத்தியை காட்டி வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இதனிடையே, தலைமறைவான மாரிச்செல்வம் என்பவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காலில் குண்டு துளைத்த நிலையில், அவர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News February 25, 2025
நல்ல மதிப்பெண் பெற்ற 400 பேருக்கு அரசு வேலை மறுப்பு!

அரசு மருத்துவர் பணிக்கு தேர்வெழுதி, நல்ல மதிப்பெண் பெற்ற 400 மருத்துவர்கள் தகுதியில்லாதவர்கள் எனக் கூறி நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் பணிக்கு 2024க்கு முன்பு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். இதனால், தாமதமாக மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ததாக, தேர்வில் வெற்றி பெற்ற 400 மருத்துவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.