News February 24, 2025
மளமளவென சரியும் பங்குச்சந்தை

தொடர்ந்து சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச்சந்தை, இன்றும் 1 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. நிஃப்டி இன்று 243 புள்ளிகள் சரிந்து 22,552 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. IT நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் கடும் சரிவைக் கண்டது, சந்தையின் இன்றைய வீழ்ச்சிக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
Similar News
News February 24, 2025
BREAKING: அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

திட்டமிட்டபடி நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முடிவு எடுத்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்த ஐகோர்ட், எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. ஆனால், 11 லட்சம் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, மாவட்ட தலைநகரில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 24, 2025
கேரளாவை உலுக்கிய பயங்கரம்: 6 பேர் கொடூரமாக கொலை

இன்று கேரளாவில் நடந்துள்ள கொடூரச் சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. மதுவுக்கு அடிமையான இளைஞர் அஃபான், 6 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளான். இன்று மாலை 4 மணியளவில் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அம்மா, பாட்டியை வெட்டிக் கொலை செய்த அந்த கொடூரன், தனது தம்பி & அவரது காதலியை தீர்த்துக் கட்டியிருக்கிறான். அதன்பின் தம்பி காதலியின் பெற்றோரையும் விட்டுவைக்கவில்லை. அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
News February 24, 2025
ஒரே நேரத்தில் பொருட்களை கொடுங்க: அமைச்சர் உத்தரவு

குடும்ப அட்டைதாரர்கள் கேட்கும் அனைத்து பொருட்களையும் நல்ல தரத்துடன் ஒரே நேரத்தில் வழங்கிடுமாறு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். கார்டுதாரர்களிடம் கனிவாக நடந்துக்கொள்ள அறிவுறுத்திய அவர், விநியோகிக்கும் பொருட்களின் எடை சரியாக இருப்பதை உறுதி செய்திடவும் ஆணையிட்டுள்ளார். பொருட்கள் இல்லையென அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.