News February 24, 2025
புதுகை கபடி விளையாட்டு வீரர் திடீர் மரணம்

புதுகை மலையப்ப நகர் கபடி விளையாட்டு வீரர் சிலம்பம் மாஸ்டர் சிவகணேசன் இயற்கை எய்திவிட்டார் . திருமயம் பகுதி மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து வந்தார். இவரது இறப்புக்கு மாணவர்களும் பொதுமக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது உடல் இன்று மாலை 4 மணியளவில் புதுகை மலையப்பன் நகர் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படும் எனகுடும்பத்தினர் சார்பாக அறிவிக்கப்படுகிறது
Similar News
News April 20, 2025
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

புதுக்கோட்டை மக்களே நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்: ▶துணை கண்காணிப்பாளர் அறந்தாங்கி – 9498100739, ▶துணை கண்காணிப்பாளர் ஆலங்குடி – 9498100764, ▶துணை கண்காணிப்பாளர் புதுக்கோட்டை – 9498100731, ▶துணை கண்காணிப்பாளர் பொன்னமராவதி – 9498100755, ▶துணை கண்காணிப்பாளர் கோட்டைப்பட்டினம்- 9498100774, ▶துணை கண்காணிப்பாளர் கீரனூர் – 9498100746. மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க..
News April 20, 2025
அன்னவாசல் அருகே 4 சக்கர வாகனம் தீ பிடித்து எரிந்து நாசம்

அன்னவாசல் அருகே உள்ள கீழசித்தகுடிபட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் (30) என்பவருக்கு சொந்தமான 4 சக்கர வாகனத்தை நேற்று இரவு வீட்டின் அருகில் இருக்கும் செட்டில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் 4 சக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 19, 2025
கொடும்பாளூர்: அகழாய்வில் கிடைத்த பழமையான பொருட்கள்

புதுக்கோட்டை கொடும்பாளூரில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் 100க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க அணிகலன்கள், 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள், பாசி மணிகள், நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கருங்கல் சுவர் உள்ளிட்டவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.