News February 24, 2025
அம்மாவின் புகழைப் போற்றி வணங்குகிறேன்- இபிஎஸ்

தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு வளம்பெறும் வகையிலான தனது மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டால் மக்களால் “அம்மா” என்று அன்புடன் அழைக்கப்பெறும் நம் ஒப்பற்றத் தலைவி, புரட்சித்தலைவி அம்மாவின் 77-வது பிறந்தநாளில், நம் உயிர்நிகர் அன்பு தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்”- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்!
Similar News
News November 16, 2025
JUST IN: சேலத்தில் இப்படி ஒரு இடமா? மறக்காம விசிட் பண்ணுங்க!

சேலம்: கோரிமேடு குரும்பப்பட்டி அருகே உள்ள காப்புக்காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நகர்வனம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, குடும்பத்துடன் அமர்ந்து பேசும் வகையில் 10-க்கும் மேற்பட்ட இடத்தில் புற்களால் வேயப்பட்ட கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.ரூ.10 நுழைவு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறக்காம விசிட் பண்ணுங்க!
News November 16, 2025
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான (கணினி சார்ந்த தேர்வு) தேர்வு இன்று (நவ.16) காலை, மாலை நடக்கிறது. இத்தேர்வை சேலம் மாவட்டத்தில் சுமார் 2,416 பேர் 7 மையங்களில் எழுதவுள்ளனர். தேர்வர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
News November 16, 2025
சேலத்தில் வேலை அறிவித்தார் ஆட்சியர்!

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நவம்பர் 21 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, செவிலியர் பயிற்சி பெற்றவர்களுக்கு பல நிறுவனங்கள் வேலை வழங்க உள்ளன. www.tnprivatejobs.in.gov.in தளத்தில் முன்பதிவு அவசியம். இதனை மற்றவர்களுகும் ஷேர் பண்ணுங்க!


