News February 24, 2025
விஜய் முதல்வராக வேண்டி முடி காணிக்கை

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வெற்றிக்கான கூட்டணிக் கணக்கை போடத் தொடங்கியிருக்கின்றன. இதில் புதிதாக உதயமான தவெக கட்சி தொண்டர்களும் தங்களது கட்சி வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். அதன் ஒருபகுதியாக விஜய் முதல்வராக வேண்டி, மதுரை அழகர்கோயிலில் உள்ள 18ம் படி கருப்பசாமிக்கு முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
Similar News
News February 24, 2025
இந்தி எதிர்ப்பில் திமுக நாடகம்

பல இடங்களில் இந்தியில் இருக்கும் எழுத்துக்களை அழித்து திமுகவினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தி எதிர்ப்பு என்று திமுகவினர் நாடகம் நடத்தி வருவதாக விமர்சித்த அண்ணாமலை, திமுக அமைச்சர்களின் வாரிசுகள் 3 மொழிகள் கற்பிக்கப்படும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பினார்.
News February 24, 2025
சிவராத்திரி.. மகா சிவராத்திரி! என்ன வித்தியாசம்?

ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தசி திதி சிவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது. அதேநேரம், மாசி மாதத்தின் சதுர்த்தசி திதியை மட்டுமே மகா சிவராத்திரியாக குறிப்பிடுவதற்கு சில காரணங்கள் உள்ளன. மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதியில் தான் சிவன்- பார்வதி திருமணம் நடைபெற்றது என்ற ஒரு கருத்து உள்ளது. அதே போல, சிவப்பெருமான் அன்றைய தினம் ரூத்ர தாண்டவம் ஆடுவதாக நம்பப்படுவதால் மகாசிவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது.
News February 24, 2025
₹1000 மகளிர் உரிமைத் தொகை.. தகுதியான பயனாளிகள் நீக்கம்?

மகளிர் உரிமைத்தொகை பெற்றுவந்த தகுதியான பயனாளிகள், திடீரென நீக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதிக வருமானம் பெறுவோர் போன்ற தகுதியில்லாதோர், இறந்தோரின் பெயர்கள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், தகுதியானவர்களுக்கு நிறுத்தப்பட்டது ஏனென்று கேள்வி எழுப்பும் பாதிக்கப்பட்டோர், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்தும், காரணத்தையும் அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என்றும் கூறுகின்றனர்.