News February 24, 2025
சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை.. பாதுகாப்பு கேட்ட EPS

தமிழ்நாட்டில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், அதிமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 24, 2025
ஜியோ கிரிக்கெட் டேட்டா பேக்: 90 நாட்களுக்கு இலவசம்!

கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஒரு புதிய பேக்கை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. ஜியோ சினிமா, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆகிய இரு நிறுவனங்களும் ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ என்ற பெயரில் அண்மையில் ஒரே நிறுவனமாக இணைந்துள்ளன. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் தொடர் இரண்டையும் நேரடியாக காணும் வகையில் ரூ.195-க்கான புதிய பேக் அறிமுகம் செய்துள்ளது. இதில் 90 நாள்களுக்கு ஜியோஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன், 15GB டேட்டாவும் கிடைக்கும்.
News February 24, 2025
இந்தி எதிர்ப்பில் திமுக நாடகம்

பல இடங்களில் இந்தியில் இருக்கும் எழுத்துக்களை அழித்து திமுகவினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தி எதிர்ப்பு என்று திமுகவினர் நாடகம் நடத்தி வருவதாக விமர்சித்த அண்ணாமலை, திமுக அமைச்சர்களின் வாரிசுகள் 3 மொழிகள் கற்பிக்கப்படும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பினார்.
News February 24, 2025
சிவராத்திரி.. மகா சிவராத்திரி! என்ன வித்தியாசம்?

ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தசி திதி சிவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது. அதேநேரம், மாசி மாதத்தின் சதுர்த்தசி திதியை மட்டுமே மகா சிவராத்திரியாக குறிப்பிடுவதற்கு சில காரணங்கள் உள்ளன. மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதியில் தான் சிவன்- பார்வதி திருமணம் நடைபெற்றது என்ற ஒரு கருத்து உள்ளது. அதே போல, சிவப்பெருமான் அன்றைய தினம் ரூத்ர தாண்டவம் ஆடுவதாக நம்பப்படுவதால் மகாசிவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது.