News February 24, 2025
இபிஎஸ் நடத்திய விழா: புறக்கணித்த செங்கோட்டையன்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா இபிஎஸ் தலைமையில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராயப்பேட்டைக்கு பதிலாக ஈரோட்டில் நடந்த விழாவில் அவர் பங்கேற்றார். அதே நேரம் விழாவுக்காக ஈரோட்டில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் இபிஎஸ் பெயர் இடம்பெறாததும் பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News February 24, 2025
3 நாளில் ₹50 கோடியை வசூலித்த ‘டிராகன்’

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் 3 நாளில் ₹50 Cr வசூல் செய்துள்ளது. ஓபனிங் வார இறுதியில், தமிழகத்தில் மட்டும் ₹24.5 Cr, வெளிமாநிலங்களில் ₹10.62Cr, வெளிநாடுகளில் ₹14.7 கோடியை வசூலித்துள்ளது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்த வாரம் ₹100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 24, 2025
3 பெண்கள் பலி: CM ஸ்டாலின் இரங்கல்

தருமபுரியில் தனியார் <<15565302>>பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில்<<>> இறந்தவர்களுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாகக் கூறிய அவர், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ₹4 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். கம்பைநல்லூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி, 3 பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
News February 24, 2025
நகல் என்றுமே அசல் ஆக முடியாது: அண்ணாமலை

TNல் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில், 1000 முதல்வர் மருந்தகங்களை CM ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை TN அரசு காப்பியடித்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். அத்துடன், நகல் என்றுமே அசல் ஆக முடியாது என முதல்வர் மருந்தகம் குறித்து கிண்டலாக பதிவிட்டுள்ள அவர், தேர்வில் காப்பி அடிப்பது போன்ற மீம்ஸையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.