News February 24, 2025
USAன் ₹825 கோடிக்கு கணக்கு காட்டிய மத்திய அரசு

USA அரசுடன் இணைந்து $750 மில்லியன் மதிப்பிலான 7 திட்டங்கள் 2023-24ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டதாக, மத்திய நிதி அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு USA அரசு ₹825 கோடி நிதி வழங்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வாக்கு சதவீதத்தை அதிகரிக்க USA நிதி வழங்கியதாக டிரம்ப் கூறியது சர்ச்சையான நிலையில், அப்படியெல்லாம் இல்லை என அறிக்கை மூலம் அரசு விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News February 24, 2025
₹1000 மகளிர் உரிமைத் தொகை.. தகுதியான பயனாளிகள் நீக்கம்?

மகளிர் உரிமைத்தொகை பெற்றுவந்த தகுதியான பயனாளிகள், திடீரென நீக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதிக வருமானம் பெறுவோர் போன்ற தகுதியில்லாதோர், இறந்தோரின் பெயர்கள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், தகுதியானவர்களுக்கு நிறுத்தப்பட்டது ஏனென்று கேள்வி எழுப்பும் பாதிக்கப்பட்டோர், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்தும், காரணத்தையும் அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என்றும் கூறுகின்றனர்.
News February 24, 2025
நியூசி.,க்கு 237 ரன்கள் டார்கெட்

ICC Champions Trophy: இன்று நியூசி.,க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 77 ரன்கள் குவித்தார். அவர் மட்டும் நிலைத்து நிற்காமல் இருந்திருந்தால் அந்த அணி 200 ரன்களுக்கு கீழ் தான் இருந்திருக்கும். அதே நேரம், நியூசி., அணியில் அசத்தலாக பந்துவீசிய மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
News February 24, 2025
கூட்டணி அமைப்பாரா ரஜினி?

ஜெயலலிதாவுடன் பல நேரங்களில் முரண்பட்ட ரஜினிகாந்த், இன்று போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். எப்போதும் பாஜகவுடன் இணக்கம் காட்டும் ரஜினியின் இந்த செயல்பாடு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த தேர்தலில் பிரிந்த அதிமுக – பாஜக கூட்டணியை மீண்டும் இணைப்பதில் ரஜினி அணிலாக செயல்படலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?