News February 24, 2025

10வது போதும்! மத்திய அரசில் 21,413 காலிப்பணியிடங்கள்

image

தபால் அலுவலகங்களில் காலியாக இருக்கும் 21,413 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது. MTS Postman, Mailguard Postக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், Postal Assistant, Sorting Assistantக்கு டிகிரி, கணினி அறிவும் வேண்டும். 18 – 32 வயதுடையோர் பிப். 1 முதல் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின்றி மெரிட் அடிப்படையில் தேர்வு நடைபெறும். சம்பளம் ₹29,380 வரை. <>இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம்<<>>.

Similar News

News February 24, 2025

மளமளவென சரியும் பங்குச்சந்தை

image

தொடர்ந்து சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச்சந்தை, இன்றும் 1 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. நிஃப்டி இன்று 243 புள்ளிகள் சரிந்து 22,552 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. IT நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் கடும் சரிவைக் கண்டது, சந்தையின் இன்றைய வீழ்ச்சிக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

News February 24, 2025

அரசு ஊழியர்கள் போராட தடை!

image

அரசு ஊழியர்கள் நாளை போராடத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு மறுவிசாரணைக்கு வரும் வரை சாலை மறியல், பணி புறக்கணிப்பு உள்ளிட்ட எந்தப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ நாளை மாநில அளவில் போராட இருந்த நிலையில், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News February 24, 2025

3 ஆண்டுகளைக் கடந்த போர்.. இப்போது என்ன நிலை?

image

ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இரு தரப்பிலும் இதுவரை 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் பற்றாக்குறையால் உக்ரைன் தவித்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்கா, தற்போது உதவி செய்ய முடியாது என கைவிரித்து விட்டது. இருப்பினும் ரஷ்யாவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறது.

error: Content is protected !!