News February 24, 2025
யார் கோழை? அமைச்சர் சேகர்பாபு பதிலடி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது கோழைத்தனம் என பாமக தலைவர் அன்புமணி பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். வழக்கிற்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம். மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி சவால் விடுபவர் CM ஸ்டாலின் என தெரிவித்துள்ளார். எங்கள் முதல்வர் இரும்பு மனிதர். கோழை என கூறுபவர்கள் அந்த சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் என அவர் அன்புமணியை விமர்சித்துள்ளார்.
Similar News
News February 24, 2025
VJS படத்தில் இணைந்த சீரியல் நடிகை

விஜய்சேதுபதி நடிப்பில் பாண்டியராஜ் இயக்கி வரும் படத்தில், சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் லீட் ரோலில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. யோகிபாபு, மலையாள நடிகர் செம்பன் வினோத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். கிராமத்து கதையம்சமாக இப்படம் உருவாகி வருகிறது.
News February 24, 2025
‘சீமான்’ பெயரை கூட சொல்லாத காளியம்மாள்

நாதகவில் இருந்து விலகியது தொடர்பாக காளியம்மாள், ஒரு பக்க அளவிற்கு உருக்கமாக அறிக்கை வெளியிட்டிருந்தார். சுமார் 29 வரிகள் இருந்த அந்த அறிக்கையில் நாதகவின் பணி, அக்கட்சியின் தொண்டர்கள் செயல்பாடு, அவர்களுடன் பழகியது மற்றும் தனது குமுறலையும் உள்ளத்தில் இருந்து வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், இவ்வளவு நீண்ட நெடிய அறிக்கையில் ஒரு இடத்தில் கூட ‘சீமான்’ பெயரை கூட அவர் குறிப்பிடவில்லை.
News February 24, 2025
மளமளவென சரியும் பங்குச்சந்தை

தொடர்ந்து சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச்சந்தை, இன்றும் 1 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. நிஃப்டி இன்று 243 புள்ளிகள் சரிந்து 22,552 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. IT நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் கடும் சரிவைக் கண்டது, சந்தையின் இன்றைய வீழ்ச்சிக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.