News March 30, 2024
கோப்பையை வெல்லப்போவது யார்?

மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு போபண்ணா – மாத்யூ எப்டன் ஜோடி முன்னேறியுள்ளது. அரையிறுதியில் ஸ்பெயினின் கிரானலர்ஸ், அர்ஜென்டினாவின் ஜபல்லோஸ் ஜோடியை எதிர்கொண்ட போபண்ணா ஜோடி 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்றது. பைனலில், இவான் – ஆஸ்டின் ஜோடியை போபண்ணா ஜோடி எதிர்கொள்கிறது. அதில் எந்த ஜோடி வெல்லுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே குறிப்பிடவும்.
Similar News
News September 19, 2025
அமெரிக்கா வேண்டாம்: இந்தியா திரும்பும் ஐரோப்பா!

ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வாண்டெர் லெயென் அறிவுறுத்தியுள்ளார். வர்த்தகத்திற்கு அதிக வரிவிதிக்கும் அமெரிக்காவை மட்டும் சார்ந்திருப்பதை முற்றிலும் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலவச வர்த்தகம் ஒப்பந்தம் தொடர்பாக பல ஐரோப்பிய தலைவர்களுடன் PM மோடி போனில் பேசிய நிலையில், இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
செப்டம்பர் 19: வரலாற்றில் இன்று

*1893 – உலகில் முதன்முறையாக நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. *1893 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் சொற்பொழிவை நிகழ்த்தினார். *1965 – இந்திய வம்சாவளியான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்தநாள். *1980 – தமிழிசை, நாடகக் கலைஞர் கே. பி. சுந்தராம்பாள் உயிரிழந்த நாள். *1985 – மெக்சிகோவில் நிகழ்ந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 9,000 பேர் உயிரிழந்தனர்.
News September 19, 2025
கோயில் மர்ம மரணம்: தோண்ட தோண்ட எலும்புகள்

கர்நாடகா <<17492852>>தர்மஸ்தலா கோயில்<<>> மர்ம மரணம் தொடர்பாக வாக்குமூலம் அளித்த கோயில் நிர்வாகி, பொய் புகார் அளித்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால், கோயிலுக்கு அருகில் உள்ள பங்களாகுட்டா வனப்பகுதியில், கடந்த 2 நாள்களாக தோண்ட தோண்ட மண்டை ஓடுகளும், எலும்புகளும் கிடைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 நாள்களில் மட்டும் 7 மண்டை ஓடுகள், ஏராளமான எலும்புகள், சேலைகள் சிக்கியுள்ளன.