News February 24, 2025
கனவில் கூட நினைச்சு பாக்கல: பிரதீப் நெகிழ்ச்சி

‘டிராகன்’ படத்தை இயக்குநர் ஷங்கர் வாழ்த்தியது, கனவிலும் தான் நினைக்காதது என பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சிறு வயதில் இருந்தே ஷங்கரின் படங்களை பிரமிப்புடன் பார்த்து வளர்ந்தவன் என்றும், அவரை போற்றும் ரசிகனாக இருந்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், தனது உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கடினம் என கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 24, 2025
3 ஆண்டுகளைக் கடந்த போர்.. இப்போது என்ன நிலை?

ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இரு தரப்பிலும் இதுவரை 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் பற்றாக்குறையால் உக்ரைன் தவித்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்கா, தற்போது உதவி செய்ய முடியாது என கைவிரித்து விட்டது. இருப்பினும் ரஷ்யாவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறது.
News February 24, 2025
நாதகவில் இருந்து விலகினார் காளியம்மாள்

நாதகவில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இத்தனை நாள்கள் உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, வருத்தங்களையும் பகிர்ந்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். தமிழ் தேசியத்தை விதைக்கும் வகையில் தன்னுடைய பயணம் தொடரும் என்று கூறிய அவர், இந்தப் பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என கனவில் கூட நினைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
News February 24, 2025
வங்கதேச வரலாற்றில் இதுவே முதல்முறை

வங்கதேசம் உருவான பிறகு, முதல்முறையாக பாகிஸ்தானுடனான நேரடி வர்த்தகத்தை அந்நாடு தொடங்கியுள்ளது. கிழக்கு பாகிஸ்தானாக இருந்த அந்த நாடு, 1971ல் இந்தியா உதவியுடன் பிரிக்கப்பட்டது. தற்போது முதல்முறையாக பாகிஸ்தானின் சரக்கு கப்பல் வங்கதேசம் செல்ல உள்ளது. ஷேக் ஹசினாவின் ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு, அந்நாடு பாக். பக்கம் சாய்ந்து வருகிறது. முன்னதாக ராணுவ ஒத்துழைப்பு குறித்து இருநாடுகளும் விவாதித்தன.