News February 24, 2025
பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட ‘டிராகன்’ இயக்குநர்

பெற்றோரிடம் தான் கேட்கும் மன்னிப்பு தான் ‘டிராகன்’ படம் என அப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். தான் டாக்டராக வேண்டும் என்ற அவர்களின் கனவை நிறைவேற்றாமல் போனதற்கும், ஒரு அடங்காத இன்ஜினியரிங் மாணவனாக இருந்ததும் தவறு என பின்னாட்களிலேயே புரிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘டிராகன்’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Similar News
News February 24, 2025
ஜெர்மன் அதிபராக உள்ள ஃப்ரெட்ரிக் யார்?

ஜெர்மன் அதிபராக (Chancellor) பதவியேற்க உள்ள கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சியின் தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ், இதுவரை ஒருமுறை கூட அமைச்சர் உள்ளிட்ட எவ்வித அரசு பதவிகளையும் வகித்ததில்லை. கார்ப்பரேட் வழக்கறிஞரும், பெரும் தொழிலதிபருமான அவர், அதிகார மோதல் காரணமாக 2009ஆம் ஆண்டு கட்சியில் இருந்து வெளியேறி, வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்தார். 1955ல் ஜெர்மனியின் ப்ரிலான் டவுனில் ஒரு நீதிபதியின் மகனாக பிறந்தார்.
News February 24, 2025
திரிஷா, நயன் இல்ல; இவங்க தான் பெஸ்ட்..! சமந்தா பளீச்

இன்ஸ்டாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் சமந்தா, அண்மையில் ரசிகர்களுடன் உரையாடினர். அப்போது ஒரு ரசிகர், யாரெல்லாம் பெஸ்ட் ஹீரோயின்ஸ்? என கேட்டிருந்தார். அதற்கு சமந்தா, அண்மையில் தனக்கு பார்வதி திருவோத்து, நஸ்ரியா, சாய் பல்லவி, அனன்யா பாண்டே, ஆலியா பட் ஆகியோரின் படங்கள் மிகவும் பிடித்ததாக குறிப்பிட்டார். உடனே ரசிகர்கள், இந்த லிஸ்டில் த்ரிஷா, நயன் ஏன் இல்லை எனக் கேட்கிறார்கள்.
News February 24, 2025
இபிஎஸ் கோட்டையில் விரிசல்.. Ex அமைச்சர்கள் ஆப்சென்ட்

சென்னையில், இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் செங்கோட்டையன், தங்கமணி பங்கேற்காதது பேசுபொருளாகி உள்ளது. இபிஎஸ் சார்ந்த மேற்கு மண்டலத்தில் முக்கிய முகமாக பார்க்கப்படும் இருவரும், இபிஎஸ் மீது அப்செட்டில் இருப்பதாலேயே ஆப்சென்ட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஈரோட்டில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் இன்று ஒட்டியுள்ள போஸ்டரில் இபிஎஸ் பெயரே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.