News February 24, 2025
திமுகவுக்கு மக்கள் கெட்-ஆவுட் சொல்வார்கள்: டிடிவி தினகரன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் குற்றங்கள், போதை கலாசாரம் அதிகரித்துள்ளதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியாக இருக்கும் எனவும், தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் மக்கள் ‘கெட்அவுட்’ சொல்வது நிச்சயம் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 24, 2025
பரிசு தருவதாக கூறி 10ஆம் வகுப்பு மாணவி வன்கொடுமை

கரூர் கிருஷ்ணாபுரம் அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பரிசு தருவதாக அழைத்து, 12ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அவலம் அரங்கேறியுள்ளது. பெற்றோரிடம் தெரிவிப்பதாக கூறியதால் மாணவியின் கழுத்தை மாணவர்கள் அறுத்த கொடூரமும் நடந்துள்ளது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் உள்ள சிறுமி அளித்த தகவலின்படி ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
News February 24, 2025
இபிஎஸ் நடத்திய விழா: புறக்கணித்த செங்கோட்டையன்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா இபிஎஸ் தலைமையில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராயப்பேட்டைக்கு பதிலாக ஈரோட்டில் நடந்த விழாவில் அவர் பங்கேற்றார். அதே நேரம் விழாவுக்காக ஈரோட்டில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் இபிஎஸ் பெயர் இடம்பெறாததும் பேசுபொருளாகியுள்ளது.
News February 24, 2025
டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா?

RTO அலுவலகம் செல்லாமலே எளிதாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். பரிவாஹன் போர்ட்டலுக்கு செல்லவும் *அதில் ‘Drivers/ Learners License’ஐ கிளிக் செய்து, மாநிலத்தை செலக்ட் செய்யவும் *‘Apply for Duplicate License’ஐ கிளிக் செய்து, விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும் *உங்களின் Proofகளை ஸ்கேன் செய்து Upload செய்யவும் *கட்டணத்தை கட்டிய பிறகு, சில நாள்களில் டூப்ளிகேட் கிடைத்து விடும்.