News February 24, 2025

திரிவேணி சங்கமத்தில் 62 கோடி பேர் புனித நீராடல்

image

திரிவேணி சங்கமத்தில் இதுவரை 62 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உ.பி அரசு தெரிவித்துள்ளது. பிரயாக்ராஜில் கடந்த மாதம் 14-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, வரும் 26-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. மகா கும்பமேளா நிறைவு பெற இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Similar News

News February 24, 2025

டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

டெல்லியை நோக்கி புறப்பட்ட அமெரிக்க விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 199 பயணிகள், 15 சிப்பந்திகளுடன் நியூயார்க்கில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் விமானத்தில் குண்டு இருப்பதாக இமெயிலில் மிரட்டல் வந்தது. இதனால், இத்தாலியின் 2 போர் விமானங்கள் துணையுடன், ரோமில் விமானம் தரையிறக்கப்பட்டது. இறுதியில் அது வெறும் வதந்தி என தெரியவந்தது.

News February 24, 2025

செயற்கை சுவாசத்தில் போப் பிரான்சிஸ்!

image

கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசம் பொருத்தி சிகிச்சையில் உள்ள போப் பிரான்சிஸ் தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக வாடிகன் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News February 24, 2025

வங்கிக் கணக்கில் ரூ.2000.. உடனே செக் பண்ணுங்க

image

மத்திய அரசின் PM-KISAN திட்டத்தின் 19வது தவணையான ரூ.2000 இன்னும் சற்று நேரத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. பீகாரின் பாகல்பூரில் நடக்கும் நிகழ்ச்சியில் PM மோடி 19ஆவது தவணைக்கான பணத்தை விடுவிக்க உள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பயன்பெற்று வரும் நிலையில், வங்கிக் கணக்கில் KYC கட்டாயம் அப்டேட் செய்திருக்க வேண்டும். உங்கள் கணக்கை உடனே செக் பண்ணுங்க..

error: Content is protected !!