News February 24, 2025
அசாருதீன் சாதனையை முறியடித்த கோலி

ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (158 கேட்ச்) முதலிடம் பிடித்துள்ளார். பாக்., எதிரான ஆட்டத்தில் 2 கேட்ச் பிடித்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் அசாருதீன் 156 கேட்ச் பிடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். சச்சின் 140, டிராவிட் 124, ரெய்னா 102 கேட்சுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Similar News
News February 24, 2025
தம்பியை கடத்தி வைத்து இளம்பெண் பலாத்காரம்

தம்பியை கடத்தி வைத்து மிரட்டி இளம்பெண்ணை 6 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிராவின் பிவாண்டியை சேர்ந்த 22 வயது பெண், இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அண்மையில் அவரை பிரேக்கப் செய்துவிட்டு வேறொரு நபரை காதலித்துள்ளார். இதனால், Ex லவ்வர் தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து பெண்ணின் தம்பியை கடத்தியுள்ளனர். தம்பிக்காக சென்ற பெண்ணுக்கு இந்த அவலம் நடந்துள்ளது.
News February 24, 2025
உடல் பருமன் பிரச்னை: 10 பேரை பரிந்துரைத்த PM

உடல் பருமன் பிரச்னை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆனந்த் மஹிந்திரா, உமர் அப்துல்லா, நடிகர்கள் மோகன்லால், மாதவன் உள்ளிட்ட 10 பேரின் பெயர்களை PM மோடி பரிந்துரைத்துள்ளார். உணவில் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர்களை கேட்டுக் கொண்டுள்ளார். உடல் பருமன் குறைப்பு இயக்கம் பெரிதாக அவர்கள் ஒவ்வொருவரும் 10 பேரை பரிந்துரைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News February 24, 2025
டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியை நோக்கி புறப்பட்ட அமெரிக்க விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 199 பயணிகள், 15 சிப்பந்திகளுடன் நியூயார்க்கில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் விமானத்தில் குண்டு இருப்பதாக இமெயிலில் மிரட்டல் வந்தது. இதனால், இத்தாலியின் 2 போர் விமானங்கள் துணையுடன், ரோமில் விமானம் தரையிறக்கப்பட்டது. இறுதியில் அது வெறும் வதந்தி என தெரியவந்தது.