News February 24, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை. ▶உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம் ▶சுயவிமரிசனம் உடையோரை, பிற விமரிசனங்கள் பாதிப்பதில்லை. ▶வாழ்க்கை சொர்க்கமா ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லேதான், ஆனா நரகமா வாழ்க்கை ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்.
Similar News
News February 24, 2025
வங்கிக் கணக்கில் ரூ.2000.. உடனே செக் பண்ணுங்க

மத்திய அரசின் PM-KISAN திட்டத்தின் 19வது தவணையான ரூ.2000 இன்னும் சற்று நேரத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. பீகாரின் பாகல்பூரில் நடக்கும் நிகழ்ச்சியில் PM மோடி 19ஆவது தவணைக்கான பணத்தை விடுவிக்க உள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பயன்பெற்று வரும் நிலையில், வங்கிக் கணக்கில் KYC கட்டாயம் அப்டேட் செய்திருக்க வேண்டும். உங்கள் கணக்கை உடனே செக் பண்ணுங்க..
News February 24, 2025
12 இந்தியர்கள் நாடு கடத்தல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 12 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். ஆசிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 299 பேரை பனாமா நாட்டு தடுப்பு முகாம்களில் வைத்து அமெரிக்கா நாடு கடத்தி வருகிறது. அவர்களில் முதல் பேட்ச் தற்போது டெல்லி வந்தடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் பஞ்சாபையும், தலா 3 பேர் உ.பி மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். இதுவரை 332 இந்தியர்கள் இப்படி நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
News February 24, 2025
PAKக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு!

CT அரையிறுதிக்கு தகுதி பெற PAK அணிக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள BANக்கு எதிரான போட்டியில் PAK அணி கட்டாயம் வெல்ல வேண்டும். அதேபோல், இன்றைய NZக்கு எதிரான போட்டியில் BAN அணி வெல்ல வேண்டும். மேலும், மார்ச் 2ல் நடைபெறும் போட்டியில் NZஐ IND வீழ்த்தினால் மட்டுமே, ரன்ரேட் அடிப்படையில் PAK அரையிறுதிக்குள் நுழைய முடியும். இதில் ஒன்று தவறினாலும் வெளியேற வேண்டியதுதான்.