News February 24, 2025
அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றிய ஜெயலலிதா

நடிகையாக தனது கலை வாழ்வை தொடங்கி தமிழக மக்களின் ‘அம்மா’வாக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த தினம் இன்று. அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரரான அவர், எம்ஜிஆர் பெற்ற வெற்றிகளையும் தாண்டி அதிமுகவை சிறப்பாக வழிநடத்தினார். 6 சட்டமன்ற தேர்தலை அவர் தலைமையில் சந்தித்த அதிமுக, 4 முறை வெற்றிபெற்றது. குறிப்பாக 2011, 2016இல் தொடர்ந்து ஆட்சியை பிடித்தது அவரின் தலைமைக்கு கிடைத்த சான்றாகும்.
Similar News
News February 24, 2025
3 மாநிலங்களில் மாவோயிஸ்ட் வேட்டை: என்ஐஏ அதிரடி

கேரளாவின் எடக்கரை வனப்பகுதியில் கடந்த 2017ல் ஆயுதப் பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட்களில், 3 பேரை என்ஐஏ அடுத்தடுத்து கைது செய்தது. அவர்களில் மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் ராகவேந்திராவிடம் விசாரணை நடத்தியதில் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மேலும் சிலர் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே 3 மாநிலங்களிலும் போலீசாருடன் இணைந்து என்ஐஏ தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
News February 24, 2025
முதல்வர் மருந்தகத்தில் 762 வகை மருந்துகள் விற்பனை

தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க, 1,000 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்பட உள்ளன. இவற்றில், 25 – 50% வரை குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படும். அதேநேரத்தில் அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள் நிறுத்தப்படாது. குறிப்பாக, 762 வகையான மருந்துகள், முதல்வர் மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
News February 24, 2025
வாழ்வில் இன்பத்தை பெருக செய்யும் சிவன் மந்திரம்

சிவபெருமான் ஆசி இருந்தால் நோய் நொடி இல்லாமல் வாழ்க்கை மங்களகரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அவரின் அருள் பெற இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே.