News March 29, 2024

48 பந்துகளில் 100 ரன்கள் வழங்கிய வள்ளல்

image

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ஸ்டார்க் முதல் 2 போட்டிகளிலும் சேர்த்து 100 ரன்களை வாரி வழங்கியுள்ளார். SRH-க்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 53 ரன்களை விட்டுக்கொடுத்த ஸ்டார்க், RCB உடனான இன்றைய ஆட்டத்தில் 4 ஓவர்களில் 47 ரன்களை வாரி வழங்கினார். இதனால் KKR ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஆஸியை., சேர்ந்த மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ₹24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Similar News

News October 29, 2025

பாஜக ஆளும் அசாமில் SIR நடக்காதது ஏன்? பின்னணி!

image

நாடு முழுவதும் நடக்கும் SIR நடவடிக்கையில் இருந்து அசாமுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது ஏன் தெரியுமா? அசாமில் ஏற்கெனவே NRC என்கிற குடியுரிமை சரிபார்ப்பு நடவடிக்கை நடந்துள்ளது. இதனால் அங்கு தற்போதைக்கு SIR நடவடிக்கை தேவை இல்லை என கருதப்படுகிறது. அத்துடன், மற்ற பகுதிகளை விட அசாமின் குடியுரிமை விதிகள் மாறுபட்டது. எனவே இதற்கு தனியாக வரையறைகளை அமைத்து, SIR நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

News October 29, 2025

இறந்தவரின் விரலை வைத்து போனை Unlock செய்யமுடியுமா?

image

இறந்தவரின் விரலை வைத்து அவரது ஃபோனை Unlock செய்யமுடியாது. தற்போதுள்ள போன்களின் சென்சார்களின் Liveness Detection பயன்படுத்தப்படுகிறது. அதாவது, இது ஒரு நபர் போனை Unlock செய்யும்போது, அவரது விரலில் உள்ள ஈரப்பதம், ரத்த ஓட்டம், வெப்பநிலை ஆகியவற்றை ஆராய்கிறது. இறந்தவரின் உடலில் இது இருக்காது என்பதால், அவரது ஃபோனை Unlock செய்வது சிரமம் என்கின்றனர். 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இத்தகவலை SHARE பண்ணுங்க.

News October 29, 2025

திமுக ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல்: EPS

image

நகராட்சி நிர்வாகத்துறை <<18140241>>பணி நியமனத்தில்<<>> நடந்த ஊழல் தொடர்பாக, பொறுப்பு DGP வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். CM ஸ்டாலின் போலீஸ் கைகளை கட்டாமல் இருக்க வேண்டும் எனவும், இளைஞர்களின் அரசுப்பணி கனவை, தங்கள் கமிஷன் கொள்ளைக்காக திமுக அரசு சிதைப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், இந்த திமுக ஆட்சியில் எங்கும் ஊழல் – எதிலும் ஊழல் நடந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!