News February 24, 2025
திருமணத்தை மீறிய உறவில் இத்தனை வகைகளா!

திருமணத்தை மீறிய உறவுகளை, அவற்றுக்கான காரணங்களின் அடிப்படையில் 8 வகைகளாக பிரித்துள்ளனர்: 1)எமோஷனல் உறவு (உடல் நாட்டமில்லாதது) 2)இன்னொருவர் மீது காதல் கொள்வது 3)ஒருநாள் உறவு 4)தவறான நபரை மணந்து கொண்டோம் என்று நினைத்து வேறொருவர் மீது ஏற்படும் தீவிரக் காதல் 5) செக்ஸுக்கு அடிமையாவதால் ஏற்படும் உறவுகள் 6)பழிவாங்க இன்னொரு உறவை நாடுவது 7)ஆன்லைன் காதல் 8)ஒரு உறவிலிருந்து வெளியேற இன்னொரு உறவை நாடுவது.
Similar News
News February 24, 2025
1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் இன்று திறப்பு

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை CM ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த மருந்தகங்களில் மிகவும் குறைந்த விலையில் ஜெனரிக் உள்ளிட்ட மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படவுள்ளன. முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் மூடப்படாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
News February 24, 2025
திமுகவுக்கு மக்கள் கெட்-ஆவுட் சொல்வார்கள்: டிடிவி தினகரன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் குற்றங்கள், போதை கலாசாரம் அதிகரித்துள்ளதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியாக இருக்கும் எனவும், தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் மக்கள் ‘கெட்அவுட்’ சொல்வது நிச்சயம் என்றும் தெரிவித்துள்ளார்.
News February 24, 2025
PAK அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்த கோலி

பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து அசத்திய கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். வேறு எந்த வீரரும் 3 முறைக்கு மேல் ஆட்ட நாயகன் விருது பெறாத நிலையில், கோலி தனிப்பட்ட இந்த சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் சதமடித்த கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.