News March 29, 2024

‘நெவர் எஸ்கேப்’ படக்குழுவுக்கு வாழ்த்து

image

ஸ்ரீதேவ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெவர் எஸ்கேப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் ஸ்ரீதேவ் ராஜ் உள்பட படக்குழு அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 10, 2025

விரைவில் இந்தியா – ஓமன் இடையே ஒப்பந்தம்

image

இந்தியா – ஓமன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், இரு நாடுகளும் தங்களது சுங்கவரிகளை குறைக்கும் அல்லது நீக்கும். 2024-25 ஆண்டில் 10 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இரு தரப்பு வர்த்தகம் நடந்துள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்கள், யூரியா 70% ஓமனில் இருந்து வருபவை.

News August 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 10 – ஆடி 25 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 AM – 4:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.

News August 10, 2025

ஒரு விமானத்தை கூட வீழ்த்தவில்லை: பாகிஸ்தான்

image

ஆபரேஷன் சிந்தூரில் பாக்.,-ன் 6 போர் விமானங்களை வீழ்த்தியதாக IAF தளபதி அமர் பிரீத் சிங் கூறியிருந்தார். ஆனால், இதை பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் மறுத்துள்ளார். ஒரு போர் விமானத்தை கூட இந்தியா வீழ்த்தவில்லை எனவும், நம்பிக்கை இல்லாத பட்சத்தில் நடுநிலை அமைப்புகள் இதை விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியா உண்மையை வெளிக்கொண்டு வர விடாது என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!