News March 29, 2024
கொல்கத்தா அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான 10ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. சின்னசாமி மைதானத்தில் முதலில் விளையாடிய RCB அணி 182/6 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கோலி 83 ரன்கள் குவித்தார். பின்னர் 183 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய KKR அணி 16.5 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 50, நரைன் 47 ரன்கள் எடுத்தனர்.
Similar News
News August 10, 2025
பூரண மதுவிலக்கு.. பாமக மகளிர் மாநாட்டில் தீர்மானம்

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் நடைபெற்ற பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதுவினால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதால் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், நீட் தேர்வில் சோதனை என்ற பெயரில் மாணவிகளை வேதனைக்கு ஆளாக்குவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் அதில் அடங்கும்.
News August 10, 2025
பும்ராவை எதிர்ப்பது நியாயமற்றது: பாரத் அருண்

பும்ராவுக்கு எதிராக <<17357241>> முன்னாள் வீரர்கள் <<>>வைக்கும் குற்றச்சாட்டு நியாயமற்றது என முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார். பும்ராவுக்கு முதுகில் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் மிகச்சிறந்த பவுலராக புகழப்பட்ட பும்ரா, இப்போது விமர்சிக்கப்படுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News August 10, 2025
ஒரே படத்தில் 30 முத்தக் காட்சிகளா!

திரைப்படங்களில், குறிப்பாக பாலிவுட் படங்களில் 2000-க்கு பிறகுதான் முத்தக் காட்சிகள் அதிகம் இடம்பெறத் தொடங்கின. 2013-ல் வெளியான 3G படத்தில் 30 lip lock காட்சிகள் இருந்தன. ஆனால், அந்த படம் பெரிய ஃபிளாப் ஆனது. அதன்பின் வெளியான Murder-ல் 20 முத்தக்காட்சிகள், Shuddh Desi Romance-ல் 27 காட்சிகளும், Befikre படத்தில் 25 முத்தக்காட்சிகளும் இடம்பெற்றன. ஆனாலும், இப்படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.