News February 23, 2025
GAY ரிலேஷன்ஷிப்பை மர்மமாக வைத்திருந்த OpenAI CEO

Gay தம்பதியான OpenAI CEO சாம் ஆல்ட்மேனும், ஆஸி.ஐச் சேர்ந்த ஆலிவரும், நீண்ட நாள்களாகவே ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். இவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை அந்தரங்கமாகவே வைத்திருந்தனர். 2023ல் அப்போதைய USA அதிபர் பைடன், பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் வைத்த விருந்தில் இருவரும் கலந்து கொண்டனர். 2024 ஜனவரியில் இருவரும் திருமணம் செய்த போட்டோக்கள் வைரலான பின்னரே, ஆல்ட்மேன் இதை உறுதி செய்தார்.
Similar News
News February 24, 2025
திரிவேணி சங்கமத்தில் 62 கோடி பேர் புனித நீராடல்

திரிவேணி சங்கமத்தில் இதுவரை 62 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உ.பி அரசு தெரிவித்துள்ளது. பிரயாக்ராஜில் கடந்த மாதம் 14-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, வரும் 26-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. மகா கும்பமேளா நிறைவு பெற இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
News February 24, 2025
அசாருதீன் சாதனையை முறியடித்த கோலி

ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (158 கேட்ச்) முதலிடம் பிடித்துள்ளார். பாக்., எதிரான ஆட்டத்தில் 2 கேட்ச் பிடித்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் அசாருதீன் 156 கேட்ச் பிடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். சச்சின் 140, டிராவிட் 124, ரெய்னா 102 கேட்சுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
News February 24, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை. ▶உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம் ▶சுயவிமரிசனம் உடையோரை, பிற விமரிசனங்கள் பாதிப்பதில்லை. ▶வாழ்க்கை சொர்க்கமா ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லேதான், ஆனா நரகமா வாழ்க்கை ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்.