News February 23, 2025
இந்த கேபிளை ஞாபகம் இருக்கா?

நவீன உலகில் டேட்டா டிரான்ஸ்ஃபருக்கு USB Type C, HDMI, TRS என பலவகை கேபிள்கள் வந்துவிட்டன. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கலர் கலர் RCA கேபிள்கள்தான் ஆடியோ, வீடியோ பரிமாற்றத்துக்கு பயன்பட்டது. இதில், வீடியோ சிக்னல் ஒரு கேபிளிலும் ஸ்டீரியோ ஆடியோ சிக்னல் இருவேறு கேபிளிலும் டிரான்ஸ்ஃபர் செய்யப்படும். பொதுவாக DVD பிளேயர், வீடியோ கேம் ஆகியவற்றை டிவியோடு கனெக்ட் செய்ய இந்த கேபிள்கள் பயன்பட்டது.
Similar News
News February 24, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணி வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஒடிசா அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து கூடுதல் நேரத்தில் மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வென்றது.
News February 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 188
▶குறள்:
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
▶பொருள்: நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?.
News February 24, 2025
அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றிய ஜெயலலிதா

நடிகையாக தனது கலை வாழ்வை தொடங்கி தமிழக மக்களின் ‘அம்மா’வாக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த தினம் இன்று. அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரரான அவர், எம்ஜிஆர் பெற்ற வெற்றிகளையும் தாண்டி அதிமுகவை சிறப்பாக வழிநடத்தினார். 6 சட்டமன்ற தேர்தலை அவர் தலைமையில் சந்தித்த அதிமுக, 4 முறை வெற்றிபெற்றது. குறிப்பாக 2011, 2016இல் தொடர்ந்து ஆட்சியை பிடித்தது அவரின் தலைமைக்கு கிடைத்த சான்றாகும்.