News February 23, 2025

மணமான பெண், ரேப் புகார் கூற முடியாது: ம.பி. HC கிளை

image

திருமணமான பெண், இன்னொருவர் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி RAPE செய்துவிட்டதாக புகார் கூற முடியாது என ம.பி. HC ஜபல்பூர் கிளை தீர்ப்பளித்துள்ளது. மணமான பெண் அளித்த புகாரின்படி இளைஞர் மீது போலீஸ் ரேப் வழக்குப்பதிவு செய்திருந்தது. இதை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில், SC தீர்ப்பை சுட்டிக்காட்டி, ஏற்கெனவே திருமணமான பெண் இதுபோல புகார் கூற முடியாது என இளைஞர் மீதான வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்தது.

Similar News

News February 24, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 188
▶குறள்:
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
▶பொருள்: நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?.

News February 24, 2025

அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றிய ஜெயலலிதா

image

நடிகையாக தனது கலை வாழ்வை தொடங்கி தமிழக மக்களின் ‘அம்மா’வாக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த தினம் இன்று. அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரரான அவர், எம்ஜிஆர் பெற்ற வெற்றிகளையும் தாண்டி அதிமுகவை சிறப்பாக வழிநடத்தினார். 6 சட்டமன்ற தேர்தலை அவர் தலைமையில் சந்தித்த அதிமுக, 4 முறை வெற்றிபெற்றது. குறிப்பாக 2011, 2016இல் தொடர்ந்து ஆட்சியை பிடித்தது அவரின் தலைமைக்கு கிடைத்த சான்றாகும்.

News February 24, 2025

கேரளாவில் காட்டு யானை தாக்குதலில் 2 பேர் பலி

image

கேரளாவில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தம்பதியினர் உயிரிழந்தனர். வனப்பகுதியில் தம்பதியரான வெள்ளி மற்றும் அவரது மனைவி லீலா முந்திரி கொட்டை சேகரித்து கொண்டிருந்தபோது யானை தாக்குதலுக்கு ஆளானார்கள். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். யானை தாக்குல் தொடர்ந்து நடக்கும் நிலையில், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!