News February 23, 2025
ஏழைகளின் ஆப்பிளில் இவ்வளவு நன்மையா?

கொய்யாப் பழத்தை ஏழைகளின் ஆப்பிள் என்று அழைப்பதுண்டு. காரணம், ஆப்பிளை விட அதிகமான சத்துக்கள் இதில் இருக்கின்றன. குறிப்பாக, இதிலிருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலை தவிர்த்து, வயிற்றை நலமாக வைக்க உதவுகிறது. இதில் இருக்கும் பொட்டாசியம், ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது. அதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது.
Similar News
News February 24, 2025
அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றிய ஜெயலலிதா

நடிகையாக தனது கலை வாழ்வை தொடங்கி தமிழக மக்களின் ‘அம்மா’வாக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த தினம் இன்று. அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரரான அவர், எம்ஜிஆர் பெற்ற வெற்றிகளையும் தாண்டி அதிமுகவை சிறப்பாக வழிநடத்தினார். 6 சட்டமன்ற தேர்தலை அவர் தலைமையில் சந்தித்த அதிமுக, 4 முறை வெற்றிபெற்றது. குறிப்பாக 2011, 2016இல் தொடர்ந்து ஆட்சியை பிடித்தது அவரின் தலைமைக்கு கிடைத்த சான்றாகும்.
News February 24, 2025
கேரளாவில் காட்டு யானை தாக்குதலில் 2 பேர் பலி

கேரளாவில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தம்பதியினர் உயிரிழந்தனர். வனப்பகுதியில் தம்பதியரான வெள்ளி மற்றும் அவரது மனைவி லீலா முந்திரி கொட்டை சேகரித்து கொண்டிருந்தபோது யானை தாக்குதலுக்கு ஆளானார்கள். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். யானை தாக்குல் தொடர்ந்து நடக்கும் நிலையில், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News February 24, 2025
இன்றைய (பிப். 24) நல்ல நேரம்

▶பிப்ரவரி- 24 ▶மாசி – 12 ▶கிழமை: திங்கள்
▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM
▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM
▶குளிகை: 01:30 AM – 03:00 AM
▶திதி: துவாதசி ▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: மிருகசீருஷம் ▶நட்சத்திரம்: பூராடம் மா 5.04