News February 23, 2025

திமுகவினர் அத்துமீறல்: பொள்ளாச்சியில் மீண்டும் இந்தி!

image

பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை இன்று (பிப்.23) காலை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கருப்பு மை வைத்து அழித்த நிலையில் சில மணி நேரங்களில் ரயில் நிலைய அதிகாரிகள் மீண்டும் இந்தியில் எழுதினர். திமுகவின் கோவை தெற்கு சட்ட திட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் உட்பட ஐந்து பேரு மீது பொள்ளாச்சி காவல்துறையினர் வழக்குப்பதிந்தனர்.

Similar News

News July 6, 2025

கோவை: பெட்டதம்மன் மலைக்கோயில்!

image

கோவை காரமடை அருகே உள்ள, பெட்டதாபுரத்தில் புகழ்பெற்ற பெட்டதம்மன் மலைக்கோயில் உள்ளது. இந்த கோயிலை காண 2 கி.மீ அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணிக்க வேண்டும். சக்திவாய்ந்த பெட்டதம்மனை தரிசித்தால், வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். கவலையை மறந்து குடும்பத்துடன் ஒருநாள் கோயிலில் செலவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு, இயற்கை எழில் கொஞ்சும் பெட்டதம்மன் கோயில் ஒரு வரப்பிரசாதம். இதை SHARE பண்ணுங்க.

News July 6, 2025

B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>>, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு கோவையில் நடைபெற உள்ளது. இந்த தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News July 6, 2025

குழந்தை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

கோவையில் கார்ட்டூன் தொடர்களுக்கு அடிமையாகி, அதில் வரும் கேரக்டர்கள் போல் தங்களை மாற்றி நடந்து கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 2வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கார்டூன் பார்ப்பதை அனுமதிக்க கூடாது. பாடம் சார்ந்ததை மட்டும் சிறிது நேரம் பார்க்க அனுமதிக்கலாம். இவ்விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்றனர். (SHARE)

error: Content is protected !!