News February 23, 2025
3 ஆண்டில் மாவட்டந்தோறும் கேன்சர் சிகிச்சை மையம்: PM

இன்னும் 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் 24 மணி நேர கேன்சர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, பட்ஜெட்டில் கேன்சர் சிகிச்சை தொடர்பாக வெளியான பல்வேறு அறிவிப்புகளை சுட்டிக்காட்டினார். அதில் கேன்சர் சிகிச்சை மருந்துகள் மலிவான விலையில் கிடைக்க செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறினார்.
Similar News
News February 24, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News February 24, 2025
துளசியை இப்படிதான் வழிபட வேண்டும்

கடவுளுக்கு உகந்த செடியான துளசியினை வழிபடுவதற்கு சில முறைகள் உள்ளன. (1) துளசியை வீட்டில் வெயில்படும், சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும் (2) தினமும் காலை குளித்துவிட்டு துளசியின் முன் விளக்கு, ஊதுபத்தி ஏற்றலாம் (3) மந்திரங்களை ஓதியபடி துளசி மாடத்தை சுற்றி வர வேண்டும் (4) துளசிக்கு பூக்களை தூவி பூஜை செய்யலாம் (5) அசுத்தமான கைகளால் துளசி செடியை தொட வேண்டாம்.
News February 24, 2025
திருமணத்தை மீறிய உறவில் இத்தனை வகைகளா!

திருமணத்தை மீறிய உறவுகளை, அவற்றுக்கான காரணங்களின் அடிப்படையில் 8 வகைகளாக பிரித்துள்ளனர்: 1)எமோஷனல் உறவு (உடல் நாட்டமில்லாதது) 2)இன்னொருவர் மீது காதல் கொள்வது 3)ஒருநாள் உறவு 4)தவறான நபரை மணந்து கொண்டோம் என்று நினைத்து வேறொருவர் மீது ஏற்படும் தீவிரக் காதல் 5) செக்ஸுக்கு அடிமையாவதால் ஏற்படும் உறவுகள் 6)பழிவாங்க இன்னொரு உறவை நாடுவது 7)ஆன்லைன் காதல் 8)ஒரு உறவிலிருந்து வெளியேற இன்னொரு உறவை நாடுவது.