News March 29, 2024

பட்டையை கிளப்பும் கொல்கத்தா அணி

image

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர்கள் பட்டையை கிளப்பி வருகின்றனர். சின்னசாமி மைதானத்தில் முதலில் களமிறங்கிய RCB அணி 182/6 ரன்களை குவித்தது. பின்னர் 183 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய KKR வீரர்கள் சால்ட் மற்றும் நரைன் அதிரடியாக விளையாடினர். இதனால் 6 ஓவர்களில் KKR அணி 85/1 ரன்களை குவித்துள்ளது. இதில் சுனில் நரைன் 47 (22) அவுட்டானார்.

Similar News

News March 22, 2026

கரூரில் அதிமுக 40,000 ஓட்டுகள் கூட வாங்காது: செந்தில் பாலாஜி

image

கரூரில் அதிமுக அபார வெற்றி பெறும் என EX மினிஸ்டர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியிருந்தார். அதற்கு, கரூரில் இருக்கிற 4 தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வி அடையும் என்று செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். தற்போதைய கள நிலவரப்படி, கரூரில் அதிமுக 40 ஆயிரம் வாக்குகளை தாண்டாது எனக்கூறிய அவர், தங்களை (திமுக) போன்று செயல்பட முடியாததை மறைப்பதற்காக தேர்தல் பரப்புரை தொடர்பாக புகார் அளிக்கப்படுவதாகவும் விமர்சித்தார்.

News March 22, 2026

மளமளவென சரிந்தது.. வரலாற்றில் முதல்முறை

image

மேற்கு ஆசிய நாடுகளில் போர் சூழல் நிலவும் நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக ₹94.01 ஆக சரிந்துள்ளது. இதற்கு வெளியேறி வரும் வெளிநாட்டு முதலீடுகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கூறப்படுகிறது. எனவே, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

News March 22, 2026

அந்த 2 மணி நேரம் மிக முக்கியம்.. இல்லன்னா கஷ்டம்

image

நீங்கள் சைபர் மோசடியில் பணத்தை இழக்க நேர்ந்தால் பதற்றமடைய வேண்டாம். உடனடியாக 1930 (அ) CyberCrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். அப்போது மோசடியாளர்கள் செய்த பரிவர்த்தனையை பற்றி வங்கியிடம் கூறி உங்கள் கணக்கை முடக்க சொல்லுங்கள். மோசடி நடந்த 1-2 மணி நேரம் தான் மிக மிக முக்கியம். இந்த நேரத்திற்கு நீங்கள் புகாரளித்தால் பணத்தை மீட்பதற்கான வாய்ப்பு அதிகம். SHARE.

error: Content is protected !!