News March 29, 2024

PhonePe பயனர்களுக்கு GOOD NEWS

image

UPI செயலியான PhonePe பயனாளர்கள் இனி ஐக்கிய அரபு நாடுகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம் என்று அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டுக்கான கரன்ஸியாக இந்திய ரூபாயை மாற்றிய பின்பு பணப் பரிமாற்றம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் UPI இருப்பது போல அரபு நாடுகளில் Neopay சேவை இருக்கிறது. அந்த இரண்டையும் இணைத்திருப்பதன் மூலம் PhonePe இந்த சேவையை வழங்கவுள்ளது.

Similar News

News January 11, 2026

POCSO சட்டத்தில் ‘ரோமியோ-ஜூலியட்’ விதி: SC

image

POCSO சட்டத்தின் தவறான பயன்பாட்டை குறித்து SC கவலை தெரிவித்துள்ளது. டீனேஜ் காதல் உறவுகள் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து விலக்கு அளிக்க ‘ரோமியோ-ஜூலியட்’ விதியை POCSO சட்டத்தில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தனிப்பட்ட விரோதத்திற்காக POCSO பயன்படுத்தப்படுவதால், ஒருமித்த பாலியல் உறவுகளை கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து ‘ரோமியோ-ஜூலியட் விதி’ பாதுகாக்கும்.

News January 11, 2026

மகாராஷ்டிராவில் இணையும் பவார்கள்

image

தேர்தல் அரசியலை பொறுத்தவரை அரசியல் கட்சிகள் கூட்டணியில் இணைவதும், பிரிவதும் வழக்கமான ஒன்றுதான். அதுதான் விரைவில் மகாராஷ்டிராவிலும் நிகழப்போகிறது. சமீபத்தில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்தனர். அதுபோலதான் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சியும் ஜன.15-ம் தேதி நடக்கவிருக்கும் புனே, பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சி தேர்தலில் கைகோர்த்துள்ளன.

News January 11, 2026

USA-வில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு.. 6 பேர் பலி

image

அமெரிக்காவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு மிசிசிப்பி, அலபாமா எல்லைக்கு அருகிலுள்ள வெஸ்ட் பாயிண்ட் பகுதியில் 3 வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்திற்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!